பட்டப்பகலில் காரில் சென்ற இளம் பெண் சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டதால், துரத்திச் சென்று காரை மடக்கிப் பிடித்த போலீசார் அதில் இருந்த ஒரு இளம் பெண் மற்றும் 3 இளைஞர்களை மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடித்து நொறுக்கிய கன மழையில் இருந்து சற்று ஓய்வு வெடுத்து வரும் சென்னையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இன்று காலையில் அதிவேகமாக கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.

அப்படி, வேகமாக சென்ற காரில் இருந்து ஒரு இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால், ரோட்டில் போவோறும், வருவோரும் அந்த காரைப் பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.

அப்போது, அந்த காரானது இலங்கை தூதரக அலுகலவத்தை கடந்து செல்ல முற்படுகையில், இலங்கை தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரான தேவசகாயம் என்பவர், அந்த காரை துரத்திச் சென்று மடக்கி தடுத்து நிறுத்தி உள்ளார். 

இதனையடுத்து, அந்த காரை அவர் சோதனை செய்த போது, அந்த காரில் இருந்த ஒரு இளம் பெண் கூச்சலிட்டபடியே, அந்த காரில் இருந்த 3 இளைஞர்களை செருப்பால் ஆவேசமாக அடித்துக்கொண்டு இருந்து உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த போலீஸ்காரர், அந்த காரில் இருந்த அந்த இளம் பெண்ணை பத்திரமாக மீட்டார்.

அத்துடன், அந்த காரில் இருந்த 3 இளைஞர்களையும் சிறைப்பிடித்த அந்த போலீஸ்காரர், அந்த 3 பேரையும் நுங்கம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார். 

இதனையடுத்து, அந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய இந்த விசாரணையில், “காரில் வந்த பெண் மென் பொறியாளர் என்பது” தெரிய வந்தது.

அத்துடன், சென்னை போரூரில் தங்கி பணி புரிந்து வரும் இந்த இளம் பெண், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்றிரவு நடந்த கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறார்.

அப்போது, அந்த கேளிக்கை விடுதியில் இந்த இளம் பெண்ணிடம் 3 இளைஞர்கள் அறிமுகம் ஆகி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, இன்று காலையில் இளம் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்த அந்த 3 இளைஞர்களும், “நீங்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு உங்களை நாங்களே காரில் அழைத்துச் சென்று விடுகிறோம்” என்று கூறி, அந்த இளம் பெண்ணை தங்களது காரில் ஏற்றி உள்ளனர்.

அப்போது, அந்த இளம் பெண் காரில் ஏறிய அடுத்த சில நிமிடங்களில் அந்த இளம் பெண்ணிடம் அந்த 3 இளைஞர்களும் பாலியல் சீண்டலில் அத்து மீறி ஈடுபட்டுள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், அந்த 3 பேரிடமிருந்து போராடிய நிலையில், ரோட்டில் சென்றவர்களிடம் சத்தம் போட்டு கத்தி, உதவி கேட்டிருக்கிறார்கள். அப்போதும் தான், இலங்கை தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரிடம் இவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், போலீஸ்காரரிடம் சிக்கிய இந்த 4 பேரும் அதிக அளவு மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து,  அவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அவரகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

குறிப்பாக, “பாலியல் தொல்லை கொடுத்ததாக” இளம் பெண் புகார் கூறி இருப்பதால், “இதன் உண்மையா தன்மை” பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பட்டப்பகலில் காரில் சென்ற இளம் பெண் சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டதால், துரத்திச் சென்று காரை மடக்கிப் பிடித்த போலீசார் அதில் இருந்த ஒரு இளம் பெண் மற்றும் 3 இளைஞர்களை மடக்கிப் பிடித்த சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.