மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில், அடுத்ததாக வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகிறது மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் திரைப்படம். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை முன்னணி இயக்குனர் பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகனாக குஞ்ஞாலி மரக்கார் IV கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், முகேஷ், நெடுமுடி வேணு, பிரணவ் மோகன்லால், அசோக் செல்வன், சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், ஹரிஷ் பெரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் மலையாளத் திரையுலகின் பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக உருவாகியுள்ள மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய,ராகுல் ராஜ், அங்கிட் சூரி, லைல் எவன்ஸ் ரோடர் ஆகியோர் இணைந்து பின்னணி இசை சேர்க்க,பாடல்களுக்கு ரோனி ராஃபெல் இசையமைத்துள்ளார்.

முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் சார்பில் தமிழில் மரைக்காயர்-அரபிக்கடலின் சிங்கம் என ரிலீஸாகவுள்ள இத்திரைப்படத்தின் அதிரடியான புதிய ப்ரோமோ டீசர் தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ டீசர் இதோ...