ரங்கா படத்தின் உன கண்கள் பாடல் வெளியீடு!
By Anand S | Galatta | November 24, 2021 14:34 PM IST
தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கபடதாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை அடுத்து இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் ரேஞ்சர் மற்றும் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
முன்னதாக இயக்குனர் N.கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள மாயோன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பலரது கவனத்தையும் இந்த நிலையில், இயக்குனர் வினோத் DL இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள ரங்கா திரைப்படத்தின் பாடல் இன்று வெளியானது.
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்துள்ள ரங்கா துரை படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்க, சுஜாதா பாபு சதீஷ் ஷாரா சுவாமிநாதன் மனோபாலா ஜீவா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மங்காத்தா திரைப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இசையமைப்பாளர் ராம் ஜீவன் இசையமைத்துள்ள ரங்கா திரைப்படத்திலிருந்து உன் கண்கள் எனும் அழகிய பாடல் தற்போது வெளியானது. கவிஞர் தாமரை வரிகளில் விஜய் பிரகாஷ் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடியுள்ள ரங்கா படத்தின் உன் கண்கள் பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.