போதையில்.. இளம் பெண் என நினைத்து 75 வயது மூதாட்டியைப் பலாத்காரம் செய்த 30 வயது இளைஞர்!
மது போதையில் இருந்த 30 இளைஞர் ஒருவர், 75 வயது மூதாட்டியை 25 வயது இளம் பெண் என நினைத்துத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் தான் இப்படி ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் சாலையோரமாக 75 வயதான மூதாட்டி ஒருவர், கல்யாணம் செய்துகொள்ளாமலே தனியாக வசித்து வந்தார்.
இந்த மூதாட்டியின் சகோதரி மகன் பாண்டி என்பவர் மட்டும், மாதம் ஒரு முறை வந்து பார்த்துவிட்டு செலவுக்குப் பணம் கொடுத்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஆனால், மற்ற நேரங்களில் இந்த மூதாட்டி அந்த பகுதியில் உள்ள கடைகளில் கை நீட்டி யாசகம் பெற்று சாப்பிட்டு காலத்தைப் போக்கி வந்தார்.
அத்துடன், இந்த மூதாட்டி தினமும் இரவு நேரங்களில் அந்த பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் படுத்து உறங்குவது வழக்கம்.
அப்படி, இந்த மூதாட்டி நேற்று முன் தினம் இரவு அங்குள்ள சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு திடீரென சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதான மணிமாறன் என்ற இளைஞர், அந்த மூதாட்டியின் அருகே வந்திருக்கிறார்.
ஆனால், அங்கு வந்த 30 வயதான மணிமாறன், கடும் போதையில் இருந்திருக்கிறார்.
அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று அந்த 75 வயது மூதாட்டியை அங்கிருந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்.
இதனையடுத்து, அந்த மூதாட்டியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, கடும் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அந்த 75 வயது மூதாட்டியைக் கழுத்தை நெறித்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்.
ஆனால், இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகி இருக்கிறது.
இதனை, அங்குள்ள காவல் நிலையத்தில் இருந்த போலீசார் கண்காணித்த நிலையில், உடனடியாக குறிப்பிட்ட அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணிமாறனை கையும் களவுமாகப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, கடும் போதையில் இருந்த அவரை, இயல்பு நிலைக்கு போலீசார் சற்று போராடியே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “இளம் பெண் என நினைத்து, மூதாட்டியைத் தூக்கிச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், “மணிமாறன் மீது ஏற்கனவே வழிப்பறி, கஞ்சா விற்பனை” என்று, பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
குறிப்பாக, தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இந்த மணிமாறன், சிறையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரிய வந்தது.
தற்போது, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து அடுத்த 10 நாட்களில் 75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவத்தில் மீண்டும் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு இருப்பது, அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.