சென்னை மழை வெள்ளத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரில் நடிகர் மன்சூர் அலிகான் படகு ஓட்டி பாட்டுப்பாடி ஆர்பரிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாகக் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்றிரவு முதல் இன்று காலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

இவற்றுடன், சென்னையில் கன மழை மீண்டும் 2 நாட்களாகக் கொட்டி தீர்த்தது. சென்னை மட்டுமில்லாது சென்னையின் புறநகர் பகுதிகளிலும் விடாது கன மழை கொட்டி தீர்த்தது.

முக்கியமாக, நேற்று மாலை முதல் விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. இப்படியாக சென்னையில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக, சென்னையின் முக்கிய சாலைகளில் எல்லாம் மழை நீர் வெள்ளம் போல் சூழந்து குளம் குட்டை போல் காட்சி அளித்தன.

அத்துடன், மீண்டும் சென்னையின் பல வீடுகளுக்குள்ளும் மழை நீர் வீட்டிற்குள்ளும் புகுந்துகொண்டது. இதனால், பொது மக்கள் செய்வதறியாது திகைத்தனர். சென்னையின் முக்கிய சாலைகளில் தேங்கிய மழை நீரால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

இப்படியாக சென்னையில் கொட்டி தீர்த்த மன மழையின் காரணமாக சென்னை சாலைகளும், தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளைச் சுற்றி மழை நீர் அப்படியே சூழ்ந்து காணப்பட்டது.

பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு உள்ளும் மழை நீர் சூழ்ந்ததால் பொது மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதி அடைந்தனர். இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

முக்கியமாக, நடிகர் மன்சூர் அலிகான் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியிலும் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சி அளித்தன. 

இந்த நிலையில் தான், தனது வீட்டின் முன்பு மழை நீர் வெள்ளம் சூழ்ந்ததை பயன்படுத்திக்கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், வீட்டில் இருந்த பாத் டப்பில் கப்பல் ஓட்டி, ஒரு படகை போல் துடுப்பு போட்டு ரண களத்தில் ஒரு குதூகலம் என்பது போல், ஓட்டி பாட்டுபாடி ஆர்ப்பரித்தார்.

நடிகர் மன்சூர் அலிகானின் பகு ஓட்டி பாட்டுப்பாடி மகிழ்ந்த இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

மிக முக்கியமாக அந்த வீடியோவில் தனது பாட்டில் அரசியல் பேசியிருக்கும் நடிகர் மன்சூர் அலிகான், “பொறந்தா தமிழ்நாட்டுல பொறக்கணும்.. சென்னை தண்ணியில மிதக்கணும்.. தமிழனாக பிறக்கணும் சென்னையில் கார் ஓட்டி மகிழணும்..” என்று, பாட்டுப்பாடி, தமிழகத்தின் அரசியலை சற்று சாடியிருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகானின் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.