பிக்பாஸ்சீசன் 5 நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .

kamal hassan

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமலஹாசன், ஹவுஸ் ஆஃப் கதர் என்ற தனது ஃபேஷன் பிராண்டை தொடங்க அண்மையில் அமெரிக்கா சென்றார். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டார்.

இதையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக நடிகர் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன், விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் கடந்த மாதம் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளை போல இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 22-ம் தேதி பதிவிட்டார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் . இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை அவருக்குப் பதில் வரும் வாரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது .

அதனைத்தொடர்ந்து  ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார் . அதோடு , சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய  பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கும் நடுவராகவும்  இருந்திருக்கிறார். அவருக்கு அனுபவம் உண்டு என்பதால் தனிமைப்படுத்திக் கொண்ட கமல்ஹாசன் சிகிச்சை முடித்து வரும் வரை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டில்ருந்து கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக கமல்ஹாசனுக்கு பதில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தகவல் பரவியது.இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.