திரும்ப வர்றேன்...சொல்லியடித்த STR ! மாநாடு முதல் நாள் வசூல் நிலவரம்
By Aravind Selvam | Galatta | November 26, 2021 19:22 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.சிறு வயதில் இருந்தே நடிக்கும் இவருக்கு எந்த அளவு புகழ் வந்ததோ அந்த அளவு பல சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார் சிம்பு.என பிரச்சனைகள் வந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டுக்கொடுத்ததில்லை.
உடல் பருமனாக கடந்த சில வருடங்களாக இருந்து வந்த STR அல்டிமேட்டாக ட்ரான்ஸ்பார்ம் ஆகி பழைய நிலைக்கு திரும்பினார்.இவரது ட்ரான்ஸ்பரமேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இவர் நடிப்பில் நேற்று வெளியான மாநாடு திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
வெங்கட் பிரபு இந்த படத்தினை இயக்கியுள்ளார்.எஸ் ஜே சூர்யா,கல்யாணி ப்ரியதர்ஷன்,பிரேம்ஜி,எஸ் ஏ சந்திரசேகர்,ஒய் ஜி மகேந்திரன் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளனர்.டைம்லூப் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
வித்தியாசமான கதைக்களத்தில் அசத்தலான திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எபோகித்த வரவேற்பை பெற்றுள்ளது.பல தடைகளை தாண்டி சிறப்பு காட்சிகள் பல ரத்தாகி வெளியான இந்த படம் தமிழகத்தில் முதல் நாளில் 8 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்தது.முதல் நாளில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த சிம்பு படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.