மலையாளத் திரையுலகின் பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பீரியட் திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம். இத்திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் குஞ்ஞாலி மரக்கார் IV எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

மோகன்லாலுடன் இணைந்து மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், முகேஷ், நெடுமுடி வேணு, பிரணவ் மோகன்லால், அசோக் செல்வன், சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், ஹரிஷ் பெரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாளம்,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ள மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்  என ரிலீசாகும் இத்திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு அவர்கள் வெளியிடுகிறார்.

மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய,ராகுல் ராஜ், அங்கிட் சூரி, லைல் எவன்ஸ் ரோடர் ஆகியோர் இணைந்து பின்னணி இசை சேர்க்க,பாடல்களுக்கு ரோனி ராஃபெல் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் நீயே என் தாயே பாடல் சற்றுமுன் வெளியானது.அந்த பாடல் இதோ...