பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஒளிபரப்பான இந்த தொடர் சில காரணங்களால் விரைவில் முடிவுக்கு வந்தது

விஜய் டிவியில் ஹீரோயினாக நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தார் ரச்சிதா.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அவர் தெரிவித்தார்.நடிகரும்,இயக்குனருமான குருப்ரசாத் நடிக்கும் கன்னட படத்தில் ரச்சிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ரச்சிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.சீரியலில் இருந்து விலகிய பின் தற்போது தனது படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் ரச்சிதா,படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.