மாமியாருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கள்ளக் காதலனை மருமகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை புளியந்தோப்பு கே.எம் கார்டன் 13 வது தெருவைச் சேர்ந்த 40 வயதான மணிவண்ணன் என்பவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இவர், அந்த பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டி வருகிறார்.

இப்படியான சூழலில் தான், கடந்த சில மாதங்களாக இவர் புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மாமியார் ஈஸ்வரியுடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் பழகி வந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, மணிவண்ணன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று வந்திருக்கிறார். இதன் காரணமாக, அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த விசயம், ஒரு கட்டத்தில் ஈஸ்வரியின் மருமகன் பிரகாஷ்க்கும் தெரிய வந்திருக்கிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பிரகாஷ், மணிவண்ணனை கண்டித்து இருக்கிறார். ஆனால், அவர் தொடர்ந்து பிரகாஷின் மாமியாருடன் ரகசியமாகப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்த விசயம் பற்றி கேள்விபடும் போதெல்லாம் மணிவண்ணனை பலமுறை அழைத்துக் கண்டித்திருக்கிறார் பிரகாஷ். ஆனாலும், பிரகாஷ் மாமியாரை சந்திப்பதை மணிவண்ணன் நிறுத்தாமல், தனது கள்ளக் காதலை தொடர்ந்திருக்கிறார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த பிரகாஷ், மணிவண்ணனை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக் காதலன் மணிவண்ணன், தனியாக ஆட்டோவில் சென்ற போது, அங்கு தனது நண்பர்களுடன் வந்த பிரகாஷ், மணவண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிவண்ணனை, அந்த வழியாகச் சென்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பிரகாஷையும், அவரது நண்பரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான், மாமியாரின் கள்ளக் காதல் விசயம் வெளியே வந்தது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.