இந்திய திரையுலகின் பிளாக்பஸ்டர் இயக்குனர்களில் ஒருவரான  இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்புக்குப் பின் அடுத்த பிரம்மாண்டமாக தயாராகி வரும் RRR திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 7 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகிறது.

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்கும் RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. RRR படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைத்துள்ளார். 

RRR திரைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிதுதுள்ளார். மேலும் அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளிவந்த RRR திரைப்படத்தின் RRR-GLIMPSE வீடியோ & நாட்டுக்கூத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் RRR படத்தின் அடுத்த பாடலாக உயிரே பாடல் தற்போது வெளியானது. எமோஷ்னலான அந்த உயிரே பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.