தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த தயாரிப்பாளராகவும் விளங்கும் நடிகர் சூர்யா, தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸானது. இயக்குனர் T.J.ஞானவேல் ஜெய்பீம் திரைப்படத்தை எழுதி இயக்கினார்.

மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதிகளை பற்றியும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டும் உருவான ஜெய்பீம் திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமொள் ஜோஸ், ராஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ரிலீஸான நாளிலிருந்து இன்று வரை பலராலும் பாராட்டப்பட்டு வரும் ஜெய்பீம் திரைப்படம், உலக அளவில் IMDb பட்டியலில் 9.6 புள்ளிகளோடு காட்பாதர் & தி ஷஷாங்க் ரீடம்ப்ஷன் புதிய படங்களை பின்னுக்கு தள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய்பீம் படக்குழுவினர் மூத்த கம்யூனிச கட்சி தலைவரான நல்லகண்ணு ஐயாவை நேரில் சந்தித்து உள்ளனர்.

நடிகர் சூர்யா , இயக்குனர் T.J. ஞானவேல் மற்றும் படக்குழுவினரை சந்தித்த தலைவர் நல்லகண்ணு ஐயா ஜெய்பீம் திரைப்படத்திற்காக அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஐயா- ஜெய்பீம் படக்குழுவினர் சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…