ஐபில் போட்டிகள் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில், சித்திரை வேட்டைக்கு தயாராவது போல, சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்கள் தற்போது வலைபயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபில் வந்தாலே போதும், கிரிக்கெட் உலகிற்கே அது கொண்டாட்டம் தான். ஒட்டுமொத்த உலகத்தின் உள்ளங்களை எல்லாம் திருடி வைத்திருக்கிறது நம் நாட்டு ஐபில். 

அதாவது, நாடுகளின் பெயரில் சிதறி கிடக்கும் நமது கிரிக்கெட் வீரர்கள் எல்லாம், ஆண்டுக்கொரு முறை தோஸ்து, அண்ணன், தம்பி என்று ஒரே  குடும்பமாய் ஒன்றிணைந்து அன்பை பரிமாறி கொண்டாடும் திருவிழாவாய் மாறி போய் இருக்கிறது நம்ம ஊர் ஐபிஎல் போட்டிகள். 

நாடெங்கும் வாழும் மக்கள், ஆளுக்கொரு வன்னமள்ளி பூசிக்கொண்டு நமது திருவிழாவை கொண்டாடும் அந்த அழகிய  தருணம், இதோ இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது.

அதாவது, சென்ற ஐபிஎல் தொடரின் போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. இதனால், ஐபிஎல் வீரர்களுக்கு விதிக்கப்படும் குவாரென்டைன் விதிமுறைகள் அனைத்தும் உடல் அளவும், மனத்தளவும் அவர்களுக்கு சற்று சோர்வை அளித்தது என்றும் கூட பல நாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தான், இந்த ஐபில் தொடர் மொத்தமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடத்தி முடிக்க பிசிசிஐ தரப்பில் இந்த முறை முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, இந்த 2022 ஆம் ஆண்டு டாடா ஐபிஎல்லிற்கான அட்டவணையை சென்ற வாரம் நமது இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருந்தது. 

அந்த வகையில், புனே மற்றும் மும்பையில் உள்ள குறிப்பிட்ட 4 மைதானங்களில் மட்டும் தான் இந்த முறை ஐபிஎல் போட்டிகள் நடக்க இருக்கின்றன.

இரு வாரங்களில் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், பயிற்சியை துவங்க நமது சென்னை சிஎஸ்கே சிங்கங்கள், தற்போது மைனதானத்தில் ஒன்றாக சேர்ந்து களத்தில் குதித்து உள்ளனர்.

அந்த வகையில், சென்னை அணியின் கேப்டனான தோனியோடு சேர்ந்து, அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹஸ்சீ என்று 3 பேரும் சேர்ந்து நேற்றிரவு மைதானத்திற்கு வந்தடைந்தனர். 

அத்துடன், சென்னை அணியின் வீரர்களான ருதுராஜ் கைக்கவாட், ராஜவர்தான் ஹாங்காரகேகர், சிவம் துபே, அம்பத்தி ராயுடூ ஆகியோரும் இன்று காலை சென்னை அணியோடு தற்போது இணைந்து உள்ளனர்.

அதன்படி, சென்னை அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சென்னை அணி நிர்வாகம் தற்போது வெளியிட்டு உள்ளது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது, கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபில் தொடரில் வெற்றி பெற்று, கோப்பையை தட்டிச் சென்றது. அந்த வகையில், தற்போதைய  ஐபில் வெற்றி அரியாசனத்தில் சென்னை அமர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வருடம் ஐபிஎல் தொடரில், மேலும் இரு அணிகள் வருவதன் மூலம் மெகா ஏலம் ஒன்று நடைபெற்று அணைத்து அணிகளிலும் வீரர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். 

என்ன தான் வெவ்வேறு வீரர்கள் வந்திணைந்தாலும், வருபவர்களுடன் கை கோர்த்து அவர்களை வெற்றி பாதைக்கு தல தோனி அழைத்து செல்வார் என்பது ரசிகர்களின் அதீத நம்பிக்கையாக இருக்கிறது. இந்த ஆண்டும் சென்னை அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வெற்றி மகுடம் சூடும் என்றும், சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.