சென்னை தி.நகரில்  திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் போது மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.

kani

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் சென்னை தி.நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து உணவு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த அறக்கட்டளையின் சார்பில் 10000 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.இந்த நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வேலு டி நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.


 இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மழை நீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் சென்னையில் மழை வெள்ளம் என்பது நீண்ட காலம் போராட்டமாகவே உள்ளது இதற்கான நிரந்திர முடிவுகள் எடுக்கப்படும்.நீர் வழி பாதைகளை மறித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியதே வெள்ளத்துக்கு காரணம்.கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. நிச்சயமாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என நாடாளு மன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்கள் முதல்வரின் தொகுதியிலேயே குறை இருப்பதாக கூறிய அண்ணாமலை பற்றிய  கேள்வி எழுப்பினர் பதிலளித்த அவர்  மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.