தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

இதனை தொடர்ந்து இவர் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து டாக்ஸிவாலா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் விஜய் தேவர்கொண்டா.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விஜய் தேவர்கொண்டாவின் மாஸ் ரசிகர்கள் மத்தியில் குறையாமலேயே இருந்தது.

மீண்டும் ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்த டியர் காம்ரேட் திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியானது.வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேர்ல்ட் பேமஸ் லவ்வர்.இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது..

இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு liger என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படம் வரும் செப்டம்பர்  ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக பன்மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் சண்டை காட்சிகளுக்கு ஜாக்கி சான் படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்த Andy Long மற்றும் குழுவினர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர் என்ற அறிவிப்பை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.