15 வயது சிறுமியிடம் காதல் ஆசை கூறி, வடமாநில இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த நிலையில், அந்த சிறுமி குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அடுத்து உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தில் 15 வயதான சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

இப்படியான நிலையில், சிறுமியின் வீட்டின் அருகே வட மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளியான 25 வயதான இளைஞர் ஒருவர், தனியாக வீடு எடுத்துத் தங்கி, அந்த பகுதியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, குறிப்பிட்ட அந்த 15 வயது சிறுமியுடன் அவர் முதலில் நட்பு முறையில் பேசி பழகி இருக்கிறார்.

இதனையடுத்து, அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்து, தனது காதல் வலையில் அந்த வட மாநில இளைஞர் வீழ்த்தியிருக்கிறார். 

அத்துடன், அந்த சிறுமியிடம், “விரைவில் உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று, வாக்குறுதியும் நம்பிக்கையும் அவன் அளித்திருக்கிறான். 

இதனை நம்பிய அந்த 15 வயது சிறுமி, அந்த 25 வயது காதலன் சொல்லும் படியெல்லாம் நடந்துகொண்டுள்ளார்.

இப்படியான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அந்த வட மாநில இளைஞன், அந்த சிறுமியை அடிக்கடி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இப்படியாகப் பல முறை அந்த சிறுமியை அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதன் காரணமாக, அந்த சிறுமி கர்ப்பமானார். தொடக்கத்தில், தனது கர்ப்பம் பற்றி சிறுமிக்கே தெரியாமல் இருந்து வந்த நிலையில் லேட்டாகதான் சிறுமிக்கு தெரிய வந்தது. 

இதனால், தொடக்கத்தில் சற்று அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தனது கர்ப்பம் குறித்து தனது காதலனிடம் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன், அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி, அந்த சிறுமியிடம் சண்டை போட்டுள்ளான். இதனையடுத்து, அன்று இரவே தனது சொந்த மாநிலத்திற்கு அவன் ஓடி விட்டதாகத் தெரிகிறது. 

அதே நேரத்தில், அந்த சிறுமியின் கர்ப்பம், கலைக்க முடியாத அளவிற்குப் பெரிதாக வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக, அந்த சிறுமி, கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று குழந்தை பெற்றெடுத்தார். 

இதனையடுத்து, மருத்துவமனை தரப்பில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. அத்துடன், சிறுமியின் தந்தையும், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான இருந்த இளைஞரை தேடி அதிரடியாக தற்போது கைது செய்துள்ளனர். அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.