தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.தொடர்ந்து இளைஞர்களை கவரும் வண்ணம் இவர் படங்கள் கொடுத்து வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தாராள பிரபு திரைப்படம் வெளியாகி விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள சில படங்கள் வெளியாகவுள்ளன.

இவரது தாராள பிரபு படத்தின் சூப்பர்ஹிட் பாடலான அனிருத் இசையமைத்த டைட்டில் ட்ராக் பாடல் டிக்டாக்கில் செம ட்ரெண்ட் அடித்தது.இந்த பாடல் டிக்டாக்கில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.டிக்டாக் மட்டுமின்றி அனைத்து சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஹிட் அடித்திருந்தது.

ரிலீஸிற்கு பிறகு இந்த பாடல் இல்லாமல் எந்த திருமணமும் நடப்பதில்லை.இந்த பாடல் யூடியூப்பிலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.தற்போது இந்த பாடலின் வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.இந்த சாதனையை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.