பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாகிய அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அந்தகன் என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பொன்மகள் வந்தாள் இயக்குனர் ஜேஜே பெடரிக் என்பவர் இயக்க இருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக் மற்றும் சிம்ரன் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

அதன் பின் நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், மனோபாலா, பிரியா ஆனந்த் நவரச நாயகன் கார்த்திக், யோகிபாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் ஆகியோர் நடிக்கின்றனர். 

அந்தகன் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இன்று டாப் ஸ்டார் பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி அந்தகன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தகன் படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 

இதுவரை படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், சென்னை மற்றும் புதுச்சேரியில் எடுக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே இன்னும் பாக்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த படத்திற்காக பியானோ பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டாராம். மாரி சக்தி என்ற பியானோ கலைஞர் பிரசாந்திற்கு ட்ரைனிங் தந்துள்ளார்.