பொங்கல் விருந்தாக வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஷாந்தனு. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தளபதி விஜய்யுடன் ஷாந்தனு ஆடிய நடனத்தை யாரும் மறக்க முடியாது. நடனத்தால் அரங்கையே அதிர வைத்தனர். 

ஷாந்தனு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் முருங்கைக்காய் சிப்ஸ். கடைசியாக இப்படத்தின் ஏதோ சொல்ல பாடல் ப்ரோமோ வெளியாகி இணையத்தை கலக்கியது. தரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஷாந்தனுவின் தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

படத்தில் ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். யோகிபாபு, ஊர்வசி, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ரசிகர்களை கிரங்கடிக்கும் காட்சிகள் படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முருங்கைகாய் குறித்த சமாச்சாரம் பாக்யராஜ் படங்களில் வரும் சிறப்பாம்சம் என்பதால், இப்படத்திற்கு ஆவலாக உள்ளனர் திரை விரும்பிகள்.

இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இராவண கோட்டம் படத்தில் நடித்து வருகிறார் ஷாந்தனு. கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.