மகனின் திருமணத்தின் போது, மணமகளாக வந்த பெண் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன தனது மகள் என்பதை தாயார் கண்டுபிடித்ததால், “அண்ணனை எப்படி திருமணம் செய்துகொள்வது?!” என்று, மணமேடையில் இளம் பெண் குழம்பி நின்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் தான் இப்படி ஒரு ஆச்சரிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சீனா நாட்டின் ஜியாங்சு மணகோலத்தில் சுஜோவில் கடந்த 31 ஆம் தேதி திருமண நிகழ்வு ஒன்று நடந்து உள்ளது.

அப்போது, தனது மகனின் திருமணத்தில் மணமகளாக வந்த மணப்பெண், நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன தனது மகள் என்பதனை மாப்பிள்ளையின் தாயார் கண்டு பிடித்து உள்ளார்.

அதாவது, மணப்பெண்ணின் கையில் இருந்து பிறப்பு அடையாளமான பெரிய அளவிலான மச்சத்தை, அந்த தாயார் பார்த்து உள்ளார். அதனைப் பார்த்ததும், நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன தனது மகளின் நியாபகம் அவருக்கு வந்து உள்ளது.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த தாயார், இது குறித்து மணப்பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்து உள்ளார். அப்போது, “இந்த பெண்ணை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்து வருவதை” அவர்கள் ஒப்புக்கொண்டனர். 

அதாவது, சம்மந்தியின் கேள்வியைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் பெற்றோர், நீண்ட நாள் ரகசியத்தை உடைத்து உள்ளார்கள். அதன் படி, 

“நாங்கள் இந்த பெண்ணை சாலையோரத்தில் பார்த்தோம். இவர், அப்போது தனியாக ஆதரவின்றி இருந்ததால், எங்கள் சொந்த குழந்தை போல் நாங்கள் வளர்த்து வருகிறோம்” என்று, அவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

அப்போது, “இந்த பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன நான் பெற்றெடுத்த பெண்” என்று கூறி, அந்த தாயார் கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.

இதனைக் கேட்ட மணப்பெண், கண்ணீர் விட்டு அழுது நிலையில், தன்னை பெற்றெடுத்த பெற்றோரைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். 

தன்னுடைய திருமண நாளில் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்த அந்த பெண், அதே நேரத்தில் சற்று குழப்பமும் அடைந்தார்.

அதாவது, “மணமகனாக இருக்கும் அண்ணனை எப்படி திருமணம் செய்துகொள்வது?!” என்று, மணமேடையில் அந்த பெண் குழம்பி நின்று உள்ளார்.

ஆனால், இதனையடுத்து அந்த மேடையில் அடுத்தடுத்து பல ஆச்சரியங்கள் நிறைந்து காணப்பட்டன. இதனால், அந்த பெண்ணின் திருமணம் அப்போது திட்டமிட்டபடி நடைபெற்றது.

எப்படியென்றால், அந்த மணப் பெண் தனது சகோதரரை திருமணம் செய்வதில் அப்போது தயக்கம் காட்டி உள்ளார். ஆனால், மணப்பெண் அவரை திருமணம் செய்து கொள்ள அவர்களது பெற்றோர்கள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. 

அதற்கு காரணமாக, “மகள் காணாமல் போன பிறகு, ஒரு வருடமாக மகளைத் தேடி அலைந்து உள்ளனர். ஆனால், அந்த பெண்ணை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இதற்கு மேலும் தேடுவது பயனற்றது என்று எண்ணிய அவர்கள், அந்த மணமகனை சிறுவயதிலேயே அவர்கள் தத்தெடுத்து வளர்த்து” வந்து உள்ளனர்.

இதன் மூலமாக, “மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் உடல் ரீதியான ரத்த சொந்தங்கள் இல்லை என்பதால், இந்த திருமணத்தில் என்ற பிரச்சனையும் இருக்காது” என்று, இரு வீட்டார் பெற்றோரும் கூறி உள்ளனர்.

இதனால், நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த தம்பதியானர் தொடர்ச்சியாகத் திருமண சடங்குகளை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு முறைப்படி திருமணம் நடந்து உள்ளது. இந்த நிகழ்வு, அந்த திருமண விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வு, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.