ஆபாச வலைத்தளங்களில் பாலியல் வன்முறை தொடர்பான வீடியோக்கள் குவிந்து கிடப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 

இது தொடர்பாக டர்ஹாம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவை தற்போது வெளியிட்டு உள்ளன.

அந்த ஆய்வின் முடிவின் படி, “Pornhub உள்ளிட்ட பல ஆபாச வலைத்தளங்களில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்று சந்தேகிக்கப்படும் வீடியோக்கள் பலரும், வயது வித்தியாசம் எதுவும் இன்றி குவிந்து கிடப்பதாக” கூறியுள்ளது.

இதில், “குழந்தைகள் தொடர்பா ஆபாச காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாகவும்” வேதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், “பிரபல ஆபாச வலைத்தளங்களில் இருக்கும் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்று சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பெண்களுக்கு எதிராக வன்முறை மற்றும் பலாத்கார செயல்களை அப்பட்டமாகக் குழந்தைகளுக்குக் காட்டுவதாக” அதில், கூறப்படுகிறது. இந்த ஆய்வான, மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றாகவும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மேலும், “Pornhub மற்றும் Xvideos ஆபாச வலைத்தளங்களின் ஹோம் பேஜில் இருந்த சுமார் 1,31,738 வீடியோக்களை ஆராய்ச்சியாளர்கள் கவனத்தில் கொண்டு” அவற்றை ஆய்வு செய்தனர். 

“ஹோம் பேஜில் உள்ள 8 வீடியோக்களில் 1 பாலியல் வன்முறைச் செயலை கொண்டிருந்ததாகவும், அவை சம்மதமில்லா பாலியல் செயலை காட்டியதாகவும்” சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

இவற்றுடன், “பல வீடியோக்களில் போதைப் பொருட்களுடனோ அல்லது மிகவும் இளமையான தோற்றத்துடனோ உள்ள செயல்பாடுகள் இருப்பதாகவும்” அதில் கூறப்பட்டு உள்ளது. முக்கியமாக, அதனைப் பற்றிய மேலும் விவரிக்கப்பட்ட கிளிப்புகள் அங்கே இருந்ததாகவும்” ஆராய்வுகள் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

“பாலியல் பலாத்கார ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பது அல்லது விநியோகிப்பது இங்கிலாந்தில் சட்ட விரோதமானது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே நேரத்தில், “இப்படிப்பட்ட பல வீடியோக்களுக்கு காதலன் - கேர்ள் பிரண்டை உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது என்ற தலைப்பில் அதில் இடம் பெற்றுள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“இந்த வீடியோக்கள் வன்முறைச் செயலைக் குறிக்கும் போன்ற பல முக்கிய வார்த்தைகளுடன் tag செய்யப்பட்டு உள்ளன என்றும், இப்படியான வலைத்தளங்களின் ஹோம் பேஜின் மணி நேர ஸ்கிரீன் ஷாட்களை 2017 - 18 க்கு இடையில் 6 மாதங்களுக்கு சேகரித்துள்ளதையும்” ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

அத்துடன், “முக்கியமான ஆபாச வலைத்தளங்களில் எளிதாகவும், சுதந்திரமாகவும் கிடைக்கக்கூடிய குற்றவியல் விஷயங்களைப் பற்றி இந்த ஆய்வின் முடிவுகள் கேள்விகளை எழுப்பி உள்ளதாகவும்” அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “ஒருமித்த உறவிற்கும், பாலியல் வன்முறைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல்” இதில் இடம் பெற்றுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.