இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.  மத்திய அரசாங்கமும் மாநில  அரசாங்கங்களும் மக்களுக்காக தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு வரும் நிலையில் நோய் தொற்று அதிகரித்து வருவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் மக்களை திக்குமுக்காட வைக்கிறது.

விஜய் டிவியில் வெளியான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில்  போட்டியாளராக கலந்து கொண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித் தொடர்ந்து விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டார்.சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் சில பாடல்களை பாடி உள்ளார்.

 

அடுத்ததாக விஜய் டிவியில் வெளிவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ள ஆஜீத் தினங்களுக்கு முன்பு நோய் அறிகுறிகள் தென்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

முன்னதாக பிக்பாஸ் பிரபலமான கேப்ரியலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஜித்தும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பெறுவது இருந்தது குறிப்பிடத்தக்கது. 

super singer junior winner biggboss fame aajeeth tested positive for corona

"பெரும் தொற்று ஏற்பட்டு வருவதால் அனைவரும் "முகக் கவசம்" அணிவோம் "சமூக இடைவெளி"யை பின்பற்றுவோம்  மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பாக இருப்போம்"