கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அளவில் பல பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருவது நம்மால் பார்க்க முடிகிறது. 

சமீபத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகளை ட்விட்டரில் பதிவு செய்ததால் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட பிரபல நடிகை கங்கனா ரனாவத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பாக ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து பல போலியான சர்ச்சைக்குரிய பதிவுகளை ட்விட்டரில் பதிவு செய்ததாகவும் ஒரு மாநிலத்தில் வன்முறையை தூண்டும் விதமாக   தொடர்ந்து பதிவுகள் செய்ததாலும் கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று நோய் அறிகுறிகள் தென்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் கங்கனா ரனாவத். வெளியான பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.கங்கனா ரனாவத் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

சில நாட்களாக மிகுந்த சோர்வும் கண்களில் எரிச்சலும் தென்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன் அதில் எனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நான் தனிமைப்படுத்துதல் இருக்கிறேன் கட்டாயம் இந்த கொரோனா வைரஸை அழிழித்து இதிலிருந்து மீண்டு வருவேன் கொரோனா வைரஸ்-ஐ கண்டு யாரும் பயப்பட வேண்டாம் நீங்கள் பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும் வாருங்கள் கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டுவோம். மக்கள் இதை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்  ஆனால் இது வெறும் குறுகிய கால காய்ச்சல் தான்.

என பதிவிட்டுள்ளார்.