பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் ஷில்பா ஷெட்டியை தவிர மற்ற பெரியவர்கள் வீட்டில்  உள்ள அனைவருக்கும் கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது.10 நாட்களாக வீட்டில் தனிமைப்பட்டு இருந்த குடும்பத்தினர் அனைவரும் தற்போது உடல்நிலை தேறி வருவதாக  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவு செய்திருக்கிறார்.

 

அந்த பதிவில்,

"இந்த பத்து நாட்களும் என் குடும்பத்தில் மிகவும் கடுமையான நாட்களாக இருந்தது என்னுடைய பெற்றோர்கள் என் கணவரின் பெற்றோர்கள் மற்றும் வீட்டில் இருக்கும் அனைத்து குடும்பத்தாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தபட்டார்கள் .

எங்கள் வீட்டில் பணிபுரியும் இரண்டு பணியாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டது அவர்களுக்கும் இதே மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டது. 

கடவுளின் கருணையால் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் குணமாகி  வருகிறோம்.

என்னுடைய கொரோனா பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என இன்று வெளியானது.  

உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி. 

அனைவரும் மாஸ்க், சானிடைசர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 

சமூக  இடைவெளியை பின்பற்றுங்கள் 

கொரோனா நோய் தொற்று பாசிட்டிவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் உடலிலும் மனதளவிலும் பாசிட்டிவ் ஆக இருங்கள் . 

என பதிவிட்டுள்ளார்.