கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சேது. வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருந்தார் சேது. சிறந்த நடிகரான இவர் சீரான மருத்துவரும் கூட. கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இச்செய்தி ரசிகர்கள் அல்லாது பல திரைப்பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் சந்தானம் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டிருந்தார்.

சேதுராமன் அடிப்படையில் ஒரு மருத்துவர். தோல் மருத்துவ நிபுணரான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஜி கிளினிக் என்ற தோல் வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஸ்கின் கேர் க்ளினிக்கை நடத்தி வந்தார். இந்த மருத்துவமனை சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள நிலையில், சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இதன் கிளையை அமைக்கும் பணி நடைபெற்றுவந்தது. 

இந்நிலையில் கணவன் விட்டுச் சென்ற வேலையை அவரின் மனைவி உமா தொடர்கிறார். இதையடுத்து ஈசிஆர் கிளையின் வேலைகளை முடித்து சேதுராமனின் பிறந்தநாளான இன்று மருத்துவமனையை துவங்கியுள்ளனர். சேதுராமனின் நெருங்கிய நண்பரான சந்தானம் அந்த மருத்துவமனையை துவங்கி வைத்துள்ளார்.

மருத்துவமனையில் சேதுராமனின் ஆளுயர கட்அவுட்டை வைத்துள்ளனர். அந்த கட்அவுட்டுன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சந்தானம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கட்அவுட்டில் சிரித்த முகமாக இருக்கும் சேதுராமனுடன் சந்தானத்தை பார்த்த ரசிகர்கள் ஃபீல் செய்து ஆறுதல் கூறி வருகின்றனர். 

இறந்து போன நண்பனுக்கு சந்தானம் நல்ல காரியம் செய்துள்ளார் என்று அவரை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். சேதுராமன் இறந்தபோது அவரின் மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். அவர் அண்மையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சேதுராமனே குழந்தை வடிவில் வந்துவிட்டதாக அவரின் குடும்பத்தார் சந்தோஷப்பட்டுள்ளனர். அந்த குழந்தைக்கு வேதாந்த் என்று பெயர் வைத்துள்ளனர். சேதுராமன், உமா தம்பதிக்கு ஏற்கனவே சஹானா என்கிற மகளும் இருக்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Very happy to launch my Dearest Friend Dr.Sethuraman s ZI CLINIC in ECR on his birth anniversary 😊🙏🏻 @ziclinic #ECRZiClinic

A post shared by Santhanam (@santa_santhanam) on