தென்னிந்திய திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தெலுங்கு திரையுலகம் தவிர்த்து தமிழிலும் பிரபலமாக திகழ்கிறார். மகேஷ் பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்த லாக்டவுனில் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருந்த திரைப்பிரபலங்களில் ராஷ்மிகாவும் ஒருவர். படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டிக்டாக் என பல வீடியோக்களை பதிவு செய்தும், சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார்.மேலும் தனது பண்ணை வீட்டில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளுடன் கொஞ்சி விளையாடி வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். 

சுல்தான் திரைப்படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இதுவே இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுல்தான் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்தது. விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றனர். சதிஷ், பொன்னம்பலம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் வில்லன் கருடா ராம் இதில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

இந்நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் முட்டை ஆம்லெட் செய்து அசத்தியிருக்கிறார். தனது உணவு பழங்கங்களில் இது முக்கியமான ஒன்று என கூறியுள்ளார் ராஷ்மிகா. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் இப்படி சமைக்கிறீர்கள், உங்களுக்கு வரப்போகும் கணவர் மிகவும் அதிர்ஷ்ட்டசாலி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

ராஷ்மிகா கைவசம் போகரு என்ற கன்னட படம், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள புஷ்பா என்ற திரைப்படமும் ராஷ்மிகா கைவசம் உள்ளது. ஒவ்வொரு படத்திலும் எதார்த்தமான குறும்புத்தனமான செயல்களை செய்து ரசிகர்களின் ஆதர்ஷ நாயகியாக திகழ்கிறார் ராஷ்மிகா. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Try it.. and let me know how you like it. 💛

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) on