தெலங்கானாவில் தியானப் பயிற்சி அளிப்பதாகக் கூறி 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் பூசல கன்னி என்ற பகுதியில் பிரசாத் என்பவர், தியான பயிற்சி மையம் நடத்தி வந்து உள்ளார். 

இந்த தியான மையத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த பல ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் தினமும் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இதில், அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியும் யோகா பயிற்சி பெற்று வந்தார்.

இதனையடுத்து, சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறியும், பின்னர் மிரட்டியும் சிறுமியை பிரசாத் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இப்படியாக, அந்த 15 வயது சிறுமியை அவர் கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். இதன் காரணமாக, அந்த 15 வயது சிறுமி கர்ப்பம் அடைந்து உள்ளார்.

இந்த விசயம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வரவே, சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, அந்த சிறுமி அப்பாவியாக யோகா பயிற்சியாளர் பிரசாத்தை கை காட்டி உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் திரண்டு, அந்த யோகா பயிற்சி மையத்தைத் தாக்கிவிட்டு, சிறுமியைப் பலாத்காரம் செய்த பிரசாத்தை ஓட ஓட விரட்டி அடி புரட்டி எடுத்து உள்ளனர். அந்த நபரும் பொது மக்களிடம் தர்ம அடியை வாங்கிக்கொண்டு, இங்கும் அங்குமாக ஓடி உள்ளார்.

மேலும், இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமியின் உறவினர்கள் பிரசாத்தை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, பிரசாத்தை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், சென்னையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற அரசு ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்று உள்ளார். இதனையடுத்து, கடையில் பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பிய போது, அதே பகுதியைச் சேர்ந்த 63 வயதான குமாரசாமி என்ற முதியவர், சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து உள்ளார். இதனால், வலி தாங்க முடியாத அந்த சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து உள்ளார். வீட்டிற்கு வந்ததும், தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறி, சிறுமி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்ட கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குமாரசாமியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், கைது செய்யப்பட்ட குமாரசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் சமூக நல அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதும், இவர் அப்பகுதியில் உள்ள சிறுமிகளுக்குப் பாலியல் சீண்டல் தொல்லை கொடுப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, குமாரசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.