காதலிக்க மறுத்த இளம் பெண்ணுக்கு தீ வைத்த ஒரு தலைக் காதலனை, இளம் பெண் விடாமல் கட்டிப்பிடித்ததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சித்தன்ன பேட்டையைச் சேர்ந்த சின்னாரி என்கிற இளம் பெண் ஒருவர், விஜயவாடாவில் உள்ள கோவிட் சென்டரில் நர்ஸ் வேலை செய்து வந்தார். 

அப்போது, விஜயவாடாவை சேர்ந்த நாகபூஷணம் என்ற இளைஞர், அந்த பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனால், அந்த பெண் வேலைக்கு வரும் போதும், போகும் போதும், அந்த பெண்ணை அவர் பின் தொடர்ந்து சென்று வந்து உள்ளார். ஆனால், அந்த இளைஞனின் செயல்பாடுகள் பிடிக்காமல் அந்த பெண் விலகி விலகிச் சென்று வந்துள்ளார். ஆனாலும், நாகபூஷணம் என்ற இளைஞன், அந்த பெண்ணை விடாமல் தொடர்ந்து ஒரு தலையாக விரட்டி விரட்டி   காதலித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு, அந்த பெண்ணிடம் இருந்து எந்த நல்ல பதிலும் இல்லாத நிலையில், பொறுமை இழந்த நாகபூஷணம் என்ற இளைஞர், தன் காதலை உடனே ஏற்கக்கோரிக் காதலி சின்னாரிக்கு தொல்லை கொடுத்து வந்து உள்ளார். அந்த இளைஞனின் காதல் தொல்லை எல்லை மீறி போகவே, ஒரு கட்டத்தில் பயந்து போன அந்த பெண், அங்குள்ள கண்ணவரம் காவல் நிலையத்தில் அந்த இளம் பெண் சின்னாரி புகார் அளித்தார். 

இதனையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கண்ணவரம் காவல் நிலைய போலீசார் ஒரு தலை காதலன் நாகபூசணத்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதனால், அந்த இளைஞன் தன் காதலி மீது கடும் கோபம் அடைந்து உள்ளார். 

இந்நிலையில், இன்று காலை இளம் பெண் சின்னாரி வழக்கம் போல் தன்னுடைய செவிலியர் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு தலை காதலன் நாகபூஷணம், அந்த பெண்ணை வழி மறித்து நின்று, கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில், மேலும் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான் கையோடு கொண்டு வந்த பெட்ரோல் கேனை திறந்து அதில் இருந்த பெட்ரோலை இளம் பெண் சின்னாரி மீது ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் நாகபூசணம் தீ வைத்து உள்ளார். 

இதில், அந்த இளம் பெண் மீது தீ பற்றி எரிந்த நிலையில், அந்த பெண் அலறி துடித்து உள்ளார். அத்துடன், தீ பற்றி வைத்துவிட்டு அருகில் நின்றிருந்த நாகபூஷணத்தையும், விடாமல் துரத்தி அந்த பெண் அவனைக் கட்டிப்பிடித்து உள்ளார். இதில், அந்த இளைஞன் மீதும் தீ பற்றி உள்ளது. அத்துடன், அந்த இளம் பெண்ணுக்கு உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில், ஓரளவுக்கு தீ பற்றி எரிந்த அந்த இளைஞர், படுகாயங்களுடன் கீழே சரிந்து விழுந்தார். இது குறித்து, போலீசாருக்கம் 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இருவரையும் போலீசார் மீட்டுச் சென்றனர். 

மருத்துவமனையில் சென்றதும், அந்த இளம் பெண் உயிரிழந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அத்துடன், அந்த இளைஞர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இன்று காலை அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி பிரதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலுலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டது.