தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மூத்த நடிகர் செல்லதுரை.தெறி,ராஜா ராணி,மாரி,நட்பே துணை போன்ற சமீபத்திய ரிலீஸ் படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார் செல்லத்துரை.

பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவராக செல்லதுரை மாறினார்.இவருடைய சில பட வசனங்கள் சமூகவலைத்தளங்களில் மீம்களாக வந்து இருந்தன.84 வயதான செல்லத்துரை நேற்று தனது வீட்டில் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே இறந்து விட்டார் என்ற தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இவரது இறுதி சடங்குகள் இன்று மதியம் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

காமெடி,குணச்சித்திரம் என்று அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தும் செல்லதுரையின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என்று ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை செல்லத்துரை குடும்பத்தினருக்கு தெரிவித்து வருகின்றனர்.