சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவு.பிரபல தொகுப்பாளராகவும்,நடிகையாகவும் இருந்து வந்த சித்ரா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகுந்த ஆதரவை பெற்ற சீரியல் நடிகையாக இருந்து வந்தார்.

டிசம்பர் 9ஆம் தேதி இவர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவருக்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது அனைவரும் அறிந்ததே.

விசாரணையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ரா மற்றும் ஹேமந்த்திற்கு பதிவு திருமணம் முடிந்தது தெரியவந்துள்ளது.சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது ஹேமந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.இவர் மறைவை அடுத்து அந்த கேரக்டரை அப்படியே முடித்துக்கொண்டு ,  இந்த கேரக்டருக்கு புதிதாக யாரையும் மாற்றவேண்டாம் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருந்தாலும் சீரியலை கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதால் பாரதி கண்ணம்மா தொடரில் அறிவாக நடித்து வரும் காவியா இந்த தொடரில் முல்லையாக நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.தற்போது சித்ரா நடித்து வந்த எபிசோடுகள் வரும் டிசம்பர் 22ஆம் தேதியுடன் முடிவடையும் என்று ஹேமாவின் கணவர் சதிஷ் தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை கேட்ட முல்லை ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.