நானி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | December 18, 2020 23:18 PM IST
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவர் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான ஜெர்சி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இவர் நடித்த கேங்லீடர் படமும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து நானி வி,மற்றும் Tuck ஜெகதீஷ்,Ante Sundaraniki உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது 25ஆவது படமான வி படத்தை Mohan Krishna Indraganti இயக்குகிறார்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்
இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
நானி நடித்துள்ள வி படம் அமேசான் ப்ரைம்மில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது.இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இருந்தாலும் நானி முதல்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் ,இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து டக் ஜெகதீஷ் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து நானி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Avatar 2 shoot for 2020 wrapped, director James Cameron shares epic pictures
18/12/2020 06:46 PM
Malayalam actress Anna Ben reveals shocking harassment incident at mall
18/12/2020 05:14 PM