சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு என்று கோரி மாநிலம் முழுவதும்  ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமக, வன்னியர் சங்கத்தின் தொடர்பாக தொடர்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி , விரைவில் சாதி வாரியாக கணக்கெடுப்பு எடுக்கப்படும், அதன்பின் தான் முடிவுக்கு வர முடியும் என்று கூறியிருந்தார். 

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பு , 2021ல் நடக்க இருக்கிறது. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஆனந்த பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

, 2021ல் நடக்க இருக்கிறது. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஆனந்த பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 


இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு , ‘’ சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பாதையில் சென்று கொண்டிருக்கும்போது சாதிவாரி கணக்கு ஏன் எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பி,சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை  நியமித்து இருக்கிறது. அதனால் இந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி , மனுவை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.