டெல்லியில் விவசாயிகள்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஆதரவு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் திமுகவினர் கூட்டணி கட்சிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் , இந்த போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளக் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். கொரோனா அச்சுறுதுதல் காரணமாக, அனைவரும் பச்சை நிறத்தில் முககவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மத்திய அரசு கார்ப்ரேட் கம்பனிகளுக்காக  ஆதரவாக செயல்படுகிறது. விவசாய சட்டங்களை கொண்டுவருவதற்கு முன் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் எனவும் , வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.