கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி லண்டனில் உடல்நலக்குறைவால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தாய் பேகம் ஷமிம் அக்தர் இறந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நரேந்திர மோடி , இரங்கல் கடிதம் ஓன்று நவாஸ் ஷெரீப்புக்கு அனுப்பியதாக பாகிஸ்தானின் தி டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த கடிதம் குறித்து இந்திய தூதரகம் தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை அறிவிக்க வில்லை.  


இந்த கடிதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து நவாஸ் ஷெரிப்பின் மகள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) துணை தலைவர் மரியம் நவாஸ் ஆகியோருக்கு அனுப்பபட்டு உள்ளது.


 ‘அன்புள்ள மியான் சாஹிப், நவம்பர் 22 ஆம் தேதி லண்டனில் உங்கள் தாயார் பேகம் ஷமிம் அக்தரின் மறைவை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை மீண்டு வர உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் பலம் அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.