கடந்த 2019-ம் ஆண்டு பரத் நீலகண்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கே-13. இந்த படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தார். அருள்நிதி நாயகனாக நடித்த இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடித்திருந்தார். 2019-ம் ஆண்டு வெளியான சிறந்த திரில்லர் படம் என்று பெயர் பெற்றது இப்படம். கே-13 எனும் வீட்டில் நடக்கும் கதையாக காட்சிகளை அழகாக செதுக்கியிருந்தார் பரத் நீலகண்டன். சாம் சி.எஸ் இசையில் உருவான இப்படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசைக்கு ரசிகர்கள் ஏராளம். 

இந்நிலையில் இயக்குனர் பரத் நீலகண்டன் சத்யம் திரையரங்கில் தான் சந்தித்த பிரச்சனை குறித்து பேசியுள்ளார். மாலை 6 மணியளவில், சத்யம் பார்க்கிங் ஏரியாவில் நடந்தது குறித்து பதிவு செய்துள்ளார். படம் பார்ப்பதற்காக பார்க்கிங் செய்யப் போனவரிடம், வாட்ச்மேன் நேர விவரங்கள் மற்றும் பார்க்கிங் கட்டணம் பற்றி விளக்கியது குறித்து குறிப்பிட்டுள்ளார். 

பின்னர் வாட்ச்மேனிடம் பேசிய பரத் நீலகண்டன், எனக்குத் தெரியும், ஆனால் நான் சீக்கிரம் வந்தேன், தயவுசெய்து என்னை நிறுத்த அனுமதிக்க முடியுமா, நான் எப்படியும் உங்கள் உணவகத்தில் மட்டுமே செலவிடுவேன் என்று விளக்க, ஒரு மணிநேரத்திற்கு 40 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

இப்படி இருண்ட விஷயங்கள் இருக்க, எப்படி நம் நண்பர்களையும், குடும்பத்தினரையும் சினிமாவைப் பார்க்கத் தள்ள முடியும் என்று பதிவிட்டுள்ளார். இயக்குனர் பரத்தின் இந்த பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

வாட்ச்மேன் அவரது கடமையை செய்துள்ளார். தவறு நிர்வாகம் மேல் உள்ளது என்று ஆறுதல் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். 
 

k13 director barath neelakantan disappointed over sathyam cinemas parking