கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய். சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உலகளவில் உள்ள ரசிகர்களை ஈர்த்தார். இவர் அமெரிக்காவில் எம்பிஏ படிப்பதற்காக சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டார். குறைந்த அளவு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கென ரசிகர்கள் ஏராளம். 

இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் சென்ற வருடம் இறுதியில் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவர்களது திருமணம் நடந்து முடிந்தது. ரிச்சா தற்போது கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். 

கடந்த ஆண்டு ரிச்சா வசித்த பகுதியில் காட்டுத்தீ காரணமாக பெரிய சிக்கல் ஏற்பட்டது. அந்த பகுதியில் காற்றின் தரமும் குறைந்து இருந்ததால், மூச்சு விடவும் மக்கள் சிரமப்பட்டனர். இந்த செய்தி பெரிதளவில் பேசப்பட்டது. காற்று இல்லாமல் புகை காரணமாக வரும் தலைவலியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறி மாஸ்க் ஒன்றை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் ரிச்சா.

இந்நிலையில் ரிச்சா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார். நெடுவாளியை மறக்காத ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அவரது பதிவில் வரும் ஜூன் மாதம் தான் தாயாக போகிறேன் என கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் ரிச்சாவை வாழ்த்தி வருகின்றனர். திரை ரசிகர்கள் சார்பாக ரிச்சாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.