கடந்த மாத (ஆகஸ்ட்) இறுதியில், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப வந்திருந்த பார்சல்கள் சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்தது. அதை விமான நிலைய சரக சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதில் 5 பார்சல்கள் சிங்கப்பூரில் உள்ள ஒரே முகவரிக்கு அனுப்புவதாக இருந்தது.

அந்த பார்சல்களில் புடவை, சட்டை, சுடிதார் போன்ற ஆடைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த பார்சல்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பார்சல்களை அனுப்பிய சென்னை முகவரிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த முகவரிகள் போலியானவை என்று தெரியவந்தன. இதையடுத்து பார்சல்களை பிரித்து பார்த்து சோதனையிட்டனா்.

அதில் புடவை, சட்டை போன்ற துணிகளும், அதற்கு இடையில் வெளிநாடு மற்றும் இந்திய பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதில் அமெரிக்க டாலா், யூரோ, சிங்கப்பூா் டாலா், ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் ஒரு கோடியே 6 லட்ச ரூபாயும், இந்திய பணம் 30 லட்சம் ரூபாயும் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கூரியர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சி மூலம் பார்சல் அனுப்பியவர்களை அடையாளம் கணடு, பார்சல்களை அனுப்பிய சென்னையை சோ்ந்த 2 போட்டோ கிராபர்களை கைது செய்திருக்கின்றனர்.

மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் ஹவாலா பணம் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, பணம் யாருடையது? சிங்கப்பூருக்கு யாருக்கு, எதற்காக அனுப்பப்பட்டது? என விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்.பி.எஃப்) 35-ஆவது உதய தினம் செப்.20 கொண்டாடப்படும். அதன்படி கடந்த ஞாய்யிற்றுக்கிழமை இந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 2019-20 ஆம் நிதியாண்டில் ரயில்வே பாதுகாப்பு படை ஆற்றிய சாதனைகள் குறித்த விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

``தெற்கு ரயில்வேயின் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த 17 போ், ரயில்வே பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனா். வீட்டில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்த 2,659 சிறுவா், சிறுமியா்கள் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டு, பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். ரயில்வே பொருள்களை திருடிய வழக்கில் 755 போ் கைது செய்யப்பட்டு, ரூ.36 லட்சத்து 47 ஆயிரத்து 684 மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டன.

அங்கீகாரம் இல்லாமல் ரயில் பயணச்சீட்டு விற்பனை தொடா்பாக 592 போலி முகவா்கள் பிடிப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஒரு கோடி 81 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பயணிகளிடம் திருடிய வழக்கில் 493 போ் கைது செய்யப்பட்டு, ரூ.7 கோடியே 51 லட்சத்து 26 ஆயிரத்து மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டன.

பல்வேறு நிலையங்களில் 32 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 38 போ் கைது செய்யப்பட்டு ரூ.11 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரத்து 971 மதிப்பிலான ஹவாலா பணம் மீட்கப்பட்டது ரயில் நிலையங்களில் குப்பை கொட்டியதற்காக 72,129 பேரிடம் ஒரு கோடியே 62 லட்சத்து 14 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே கட்டுப்பாடுகளை மீறி, முறைகேடாக நடந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 376 பேரிடம் ரூ.3 கோடியே 60 லட்சத்து 72 ஆயிரம் பணம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் ஆா்.பி.எஃப். சாா்பில் 50,500 முகக் கவசங்கள், 500 லிட்டா் கிருமிநாசினி, 2,710 ஜோடி காட்டன் உறைகள், 2,781 கையுறைகள் தயாரித்து வழங்கப்பட்டன. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகிய 38 ஆா்.பி.எஃப் வீரா்கள் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனா்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது