அல்லு அர்ஜுன் படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறாதா...? விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | July 30, 2020 17:47 PM IST
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வசூல் மழை ஈட்டியது.
தபு,ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.1 பில்லியன் யூடியூப் பாரவையாளர்களை பெற்று சமீபத்தில் சாதனை படைத்தது இந்த படத்தின் பாடல்கள்.டிக்டாக் இருந்த சமயத்தில் பலரும் இந்த பாடலுக்கு டிக்டாக் செய்து பதிவிட்டு வந்தனர்.குறிப்பாக பிரபலங்களும் இந்த பாடலுக்கு தங்கள் டிக்டாக்கை பதிவிட்டு வந்தனர்.
இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்யும் அளவிற்கு இந்த பாடல் பிரபலமாக இருந்தது.யூடியூப்பில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடிக்கவுள்ளார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பாதிப்பு குறைந்த பின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அல்லு அர்ஜுனுக்கு நெருக்கமானவரான ஸ்ரீனிவாச குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.ஸ்டைல் மற்றும் சப்ஸ்டன்ஸ் இணைகின்றன அறிவிப்பு நாளை வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.அல்லு அர்ஜுன் அடுத்ததாக கொரட்டாலா சிவாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது.எனவே இது அந்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.இருந்தாலும் ஸ்டைல் மற்றும் சப்ஸ்டன்ஸ் என்று அவர் பதிவிட்டுள்ளது,அல்லு அர்ஜுன் தனது சொந்த துணிகளின் பிராண்ட் குறித்த அறிவிப்பை அறிவிக்கலாம் என்றும் சில தகவல்கள் பரவி வருகின்றன.எனவே இந்த அறிவிப்பு எதனை குறித்தது என்பது குறித்து நாம் நாளை வரை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
STYLE & SUBSTANCE coming together.
Tomorrow @ 12:55 PM pic.twitter.com/lIx3ut2vaE— G Sreenivasa Kumar (SKN) (@SKNonline) July 30, 2020
Vanitha Vijayakumar posts new video from the sets of KPY - check out!
30/07/2020 04:32 PM
Divya Sathyaraj starts the 'Mahilmadhi' movement
30/07/2020 04:28 PM
Good News: Actor Ramesh Thilak becomes a father!
30/07/2020 03:00 PM
Pudhupettai team releases Oru Naalil video song after 16 years of film's release
30/07/2020 02:01 PM