திருப்பத்தூர் அருகே 65 வயது மூதாட்டியை 29 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள ஆரிக்கான் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகன் 29 வயதான ராகுல், படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ராகுல், தற்போது கொரோனா காலம் என்பதால், இதையே காரணமாக வைத்துக்கொண்டு, வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

அத்துடன், ராகுல் மது போதைக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. நண்பர்களுடன் நாள்தோறும் ஊர் சுற்றும் ராகுல், மது போதையில் தினமும் வீட்டிற்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், எப்போதும் நேற்று இரவும் மது போதையில் ராகுல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ராகுலுக்கும் அவரது தந்தை கோவிந்தராஜிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், மது போதையில் இருந்த தனது மகனை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்துப் பூட்டி உள்ளார்.

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த குடிபோதையில் இருந்த ராகுல், நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். 

இதனையடுத்து, அந்த பகுதியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வரும் 65 வயதான மூதாட்டி வீட்டிற்குச் சென்று, சைடிஸ்சாக ஊறுகாய் வேண்டும் என்று, நள்ளிரவில் அவர் வீட்டின் கதவைத் தட்டி உள்ளார். 

அப்போது, வீட்டினுள் இருந்து வெளியே வந்த அந்த 65 வயது மூதாட்டி, “ இந்த நேரத்தில் எதுவும் தர முடியாது. வீட்டிற்கு போ” என்று கூறி திட்டி உள்ளார். ஆனால், ராகுல் மது போதையில் அடம் பிடித்ததால், வேறு வழியின்றி ஊறுகாய் எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது, அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து சென்ற ராகுல், அந்த மூதாட்டியின் வீட்டில் வைத்தே, அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, விடப்படியாக இருந்த அந்த மூதாட்டி, கடுமையாகச் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் உதவியே கேட்டு கடுமையாகக் கூச்சலிட்டுள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் மூதாட்டியின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது, ராகுல் அந்த மூதாட்டியைப் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினர், ஓடிச் சென்று ராகுலைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். 

இதனையடுத்து, ஜோலார்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் அங்கு விரைந்து வந்த போலீசார், ராகுலை 
கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதனையடுத்து, ராகுல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், மது போதையில் தான், அவர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, 65 வயது மூதாட்டியை 29 வயது இளைஞர் ஒருவர், மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், திருப்பத்தூர் அருகே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.