கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சூது கவ்வும். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரமேஷ் திலக். இவர் சூது கவ்வும் படத்திற்கு முன்பாகவே மாப்பிளை, மங்காத்தா, மெரீனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது சூது கவ்வும் திரைப்படம் தான். கன்னு வச்சிருக்கேன் சிரிக்கிற எனும் ரமேஷ் பேசும் டயலாக் ரசிகர்களை ஈர்த்தது. 

இந்த படத்திற்கு பிறகு ஆண்டவன் கட்டளை, நேரம், காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு எனப் பல வெற்றிப்படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தில் லவ் கோர்ட்டில் விஜய் சேதுபதியுடன் கடவுளின் நண்பராக தோன்றி தூள் கிளப்பியவர் நடிகர் ரமேஷ் திலக்.

நடிகராக ஜொலிக்கும் இவர் முதலில் சூரியன் FMல் RJவாக இருந்தார். இவருக்கும் ஆர்.ஜே நவலட்சுமி என்பவருக்கும் கடந்த 2018-ம், ஆண்டு மார்ச் கடந்த திருமண நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ரமேஷ் மற்றும் நவலக்ஷ்மி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். 

இச்செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ரமேஷ். அதில் எனக்கு ஒரு தலைவன் பிறந்திருக்கிறான் என்று பதிவிட்டுள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரமேஷ் திலகிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளார் ரமேஷ் திலக். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. இந்த படத்திலும் ரமேஷ் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.