பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் தான் களைகட்டி இருந்தது. அதனால் நாமினேஷன் இல்லை என முன்பே அறிவித்து இருந்தார்கள். அதனால் போட்டியாளர்கள் அனைவரையும் வீட்டிலே பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் வீடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது. 

நாமினேஷன் ப்ராசஸ் வழக்கம் போலவே நடைபெற்று இருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்களை தகுந்த காரணத்தை சொல்லி நாமினேட் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது. பெரும்பாலான போட்டியாளர்கள் அனிதா மற்றும் சுசித்ராவையும் தான் நாமினேட் செய்திருக்கிறார்கள். 

அர்ச்சனா, நிஷா, ரியோ, சம்யுக்தா ஆகியோர் அனிதாவை நாமினேட் செய்திருக்கிறார்கள். அவர் சிடுமூஞ்சியாக இருக்கிறார் என தான் சம்யுக்தா காரணம் சொல்லி இருக்கிறார். மேலும் சுசித்ரா எந்த மூடில் இருக்கிறார் என தெரியவே மாட்டேங்குது என சொல்லி அவரை நாமினேட் செய்திருக்கின்றனர். சுசித்ராவை ரமேஷ், ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் செய்திருக்கிறார்கள். 

ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி நாமினேட் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த வார நாமினேஷனில் அனிதா, சுசித்ரா ஆகிய இருவர் இருப்பது உறுதியாகி இருக்கிறது. வெளியேற்றப்பட உள்ள போட்டியாளர் என்பது இந்த வார இறுதியில் தான் தெரியவரும்.

நேற்று கமல் ஹாசன் வந்த பகுதி மிகவும் ஜாலியாக சென்றது என கமெண்ட் செய்து வந்தனர் பிக்பாஸ் ரசிகர்கள். இந்த வாரம் நாமினேஷன் இருப்பதால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிதா மற்றும் சுசித்ராவுக்கு ஹவுஸ்மேட்ஸ் செக் வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.