மும்பையில் இளம் பெண்ணிடம் ஆடையை சரி செய்வதாகக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகைப்படக்காரருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி அன்று, 18 வயதுக்கு குறைவான பெண் ஒருவர், தனது தாயார் மற்றும் சகோதரருடன் அங்குள்ள ஒரு ஸ்டுடியோவுக்கு சென்ற, சினிமாவில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு சென்று உள்ளார். 

அப்போது, அந்த ஸ்டுடியோவில் இருந்த  புகைப்படக்காரர் ஒருவர், அந்த பெண்ணை ஒரு சில பேட்டோ மட்டும் எடுத்துவிட்டு, மறுநாள் மீண்டும் வரும் படி, அந்த பெண்ணை அழைத்திருக்கிறார். அதன்படி, மறுநாள் அந்த பெண் மட்டும் தனியாக வந்து உள்ளார்.

அப்போது, அந்த பெண்ணுக்கு அரைகுறை ஆடைகளை கொடுத்து, போஸ் கொடுக்க அந்த புகைப்படக்காரர் கூறியிருக்கிறார். அதன் படியும், அந்த பெண் உடை மாற்றிவிட்டு போஸ் கொடுத்து உள்ளார். அந்த நேரம் பார்த்து, அந்த பெண் அணிந்திருந்த ஆடைகளைச் சரிசெய்வது போல், அந்த புகைப்படக்காரர் தவறான நோக்கத்தில் உடலின் பல இடங்களில் கை வைத்து தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த பெண் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார். அதற்கு, அந்த புகைப்படக்காரர், இதெல்லாம் நடிப்புத் துறையில் சாதாரணம்” என்றும், இப்படி நடந்துகொண்டால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், அவர் கூறியிருக்கிறார்.

இதனால், அங்கிருந்து அழுதுகொண்டே வெளியே வந்த அந்த பெண், வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்குச் சென்ற பிறகு, தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து, தனது குடும்பத்தாரிடம் கூறி அழுது உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், அந்த புகைப்படக்காரர் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். ஆனால், விசாரணையில் அவர் செய்த தவறை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு, மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “புகைப்படக்காரரின் இந்த செயல்பாடுகள், தற்செயலானது அல்ல என்றும், ஆனால் பாலியல் நோக்கத்துடன் வேண்டும் என்றே செய்யப்பட்டது” என்றும், குறிப்பிட்டது.

அத்துடன், குற்றம்சாட்டப் புகைப்படக்காரரை நீதிமன்றம் விடுவித்த போதிலும், சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பெண், மைனர் என்பதை அரசு தரப்பின் சார்பில் நிரூபிக்கத் தவறியதால், அந்த புகைப்படக்காரர் ஐபிசி கீழ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார்.

மேலும், விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட இளம் பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபரை, அடையாளம் காட்டினார். அந்த பெண் அளித்த சாட்சியம் நம்பகமானதாக உள்ளது என்று, நீதிமன்றம் குறிப்பிட்டு, குற்றம்சாட்டப்பட்ட புகைப்படக்காரருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து உள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.