பிகார் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த காமுகனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், தீபாவளி பண்டிகையான நேற்றைய தினம், தனது குடும்பத்துடன் வீட்டில் பூஜை செய்து விட்டு, அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பூஜை செய்து விட்டு வருவதற்காக, வீட்டிலிருந்து வெளியே உள்ளார்.

ஆனால், அதன் பிறகு அந்த 8 வயது சிறுமி வீடு திரும்பிவில்ல. இதனால், சிறுமியை வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது பெற்றோர், குறிப்பிட்ட அந்த கோயிலுக்குச் சென்ற தேடி உள்ளனர். ஆனால், அங்கு அந்த சிறுமி இல்லை. இதனால், பயந்து போன சிறுமியின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், அங்குத் தேடியும் சிறுமி கிடைக்க வில்லை. இதனால், பதறிப் போன சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், ஊர் மக்கள் அந்த பகுதியில் உள்ள பல இடங்களிலும் சிறுமியைத் தேடி வந்தனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒருவரின் வீட்டில், இருந்த அட்டைப் பெட்டியில் மாயமான 8 வயது சிறுமி சடலமாகக் கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதனால், பதறிப்போன அப்பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து அந்த பகுதியில் உள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

ஆனால், போலீசார் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வருவதற்கு முன்பே, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை அப்பகுதி மக்கள் சேர்ந்து துரத்திப் பிடித்து, கடுமையாகத் தாக்கி தர்ம அடி கொடுத்து உள்ளனர். 

அதன் பிறகு, அங்க வந்த போலீசார், சிறுமியின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த குற்றவாளியை ஊர் மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, அவர் உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்ததால், கிராம மக்களிடமிருந்து அவரை மீட்ட போலீசார், உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, அந்த குற்றவாளியை “உடனடியாக தூக்கிலிடுமாறு” அந்த பகுதி மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

மேலும், சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் தொடர்ச்சியாக, சிறுமியைக் கொடூரமாக்க பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொன்றவர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனைப் பெற்றுத் தரும் முனைப்பில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

அதே போல், கேரளாவில் உள்ள 15 காவல் நிலையங்களில், சிறுவர் சிறுமிகள் பயமின்றி புகார்கள் தெரிவிக்க ஏதுவான வகையில், சிறப்பு மையங்களைக் காணொலி காட்சி வாயிலாக அந்த மாநில காவல் துறை தலைவர் லோக்நாத் பெஹெரா திறந்து வைத்தார். இது தொடர்பாகப் பேசிய அந்த காவல் துறை 

தலைவர் லோக்நாத் “காவல் நிலையங்களில் குழந்தைகள் எந்தவித அச்சமும் இன்றி புகார் அளிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்க மாநில காவல் துறை முயற்சித்து வருவதாகத் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.