பெற்ற தாயை, மகனே பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞன், மதுவுக்கு அடிமையான நிலையில், சரிவர வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சும்மாவே ஊர் சுற்றிக்கொண்டு திரிந்ததாக கூறப்படுகிறது.

அப்படி, போதைக்கு அடிமையான அந்த 21 வயது இளைஞன், வீட்டில் இருந்த தனது பெற்ற தாயைப் பார்த்து காம வசப்பட்டு உள்ளான். இதனையடுத்து, தாயை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று, திட்டம் போட்ட அந்த காமூகன், தனது தாயை வெளியில் அடைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று உள்ளான்.

அப்போது, அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குத் தனது தாயை அழைத்துச் சென்ற மகன், அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து, தனது தாய் என்றும் பார்க்காமல், வெறித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது, அவரது தாய், கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

ஆனால், அதையும் மீறி தான், பெற்ற தாயையே அவன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். அத்துடன், தனது தாயை இப்படியே விட்டால் தனக்கு ஆபத்து என்று எண்ணிய அந்த மகன், பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு, தனது தாயைக் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு, சடலத்தை அங்கேயே விட்டுச் சென்று உள்ளார்.

இதனையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள், இந்த பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் மகன் குறித்து, அப்பகுதி மக்கள் பலரும் பலவிதான கருத்துக்களை கூறினார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் இந்த விசாரணையில், மகனே பெற்ற தாயை பாலியல் பலாத்காரம் செய்து, அதன் பிறகு கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் 21 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரைக் கைது செய்தனர்.

குறிப்பாக, “கைதான இளைஞரின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் என்றும், அதன் பிறகு, தன்னுடன் வசித்து வந்த தாய் அதே பகுதியைச் சேர்ந்த வேறோரு ஆணுடனும் நெருங்கிப் பழகி வந்ததை விரும்பாத மகன், தாய் மீது காமவயப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததும்” விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பெற்ற தாயை, மகனே பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்ற சம்பவம், கர்நாடக மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், மகாராஷ்டிராவில் வீட்டு வாசலில் வந்து தூங்கியதாக நாய் மீது, ஒரு தம்பதியினர் ஆசிட் ஊற்றி உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.