பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் உலகநாயகன் கமல்ஹாசன் அகம் டிவி வாயிலாக பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களை முதல் முறையாக சந்தித்தார். அப்போது இந்த வாரம் முழுக்க நடந்த பிரச்சனைகள் குறித்து விவாதித்தார் கமல். குறிப்பாக கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை ரிவ்யூ செய்தார்.

அதன் பிறகு கடந்த வாரம் கொடுக்கப்பட்ட ஹார்ட் அன்ட் புரோக்கன் ஹார்ட் டாஸ்க் குறித்தும் பேசினார். முதல் ஆளாய் ஹார்ட் மற்றும் புரோக்கன் ஹார்ட்டை கொடுத்தார் சனம். அப்போது கடந்த வாரம் ஹார்ட் கொடுத்த பாலாஜிக்கும் சம்யுக்தாவுக்கும் இந்த வாரம் புரோக்கன் ஹார்ட்டை கொடுத்தார். பாலாஜிக்கு புரோக்கன் ஹார்ட் கொடுத்த கையோடு அது குறித்து விளக்க சொன்னார் கமல். உடனே தனக்கும் பாலாஜிக்கும் இடையே நடந்த பஞ்சாயத்துக்களை எல்லாம் சொன்னார். குறிப்பாக கார்டன் ஏரியாவில் நடந்த அந்த டுபாக்கூர் பேஷன் ஷோ விஷயத்தை கூறினார் சனம்.

பாலாஜி பேசியது ரொம்பவே காயப்படுத்தியது. அதுபோன்று சாதித்தவர்களுக்கு எல்லாம் அதை கொச்சைப்படுத்துவதை போன்று பேசினார். அதற்கு பாலாஜி முருகதாஸ் யாரையும் கொச்சைப்படுத்தவில்லை என்றார். மேலும் அந்த வார்த்தையை நான் இனிமே பயன்படுத்தவில்லை என்றார்.

ஆனாலும் விடுவதாய் இல்லை சனம் ஷெட்டி. தொடர்ந்து அதைப்பற்றியே பேசினார். இதனால் கடுப்பான கமல் நீங்கள் ஏன் உங்களை சொல்வதாய் நினைத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் வாக்குவாதத்தை வளர்த்ததால்தான் புரூவ் பண்றேன் என்று சொல்லும் அளவுக்கு வந்தது என்றார். கமலின் பேச்சு அப்படியே பாலாஜிக்கு ஆதரவாய் இருந்தது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கைகளை தட்டினர் பாலாஜிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். கமல் தனக்கு சப்போர்ட்டாய் பேசியதை பார்த்த பாலாஜியும் வெறித்தனமாக கண்களில் எதையோ சாதித்த திமிருடன் கைகளை தட்டினார்.

ஆனால் இன்று பாராட்டிய கமல், நாளைக்கு அவருக்கு ஒரு ஆப்பை ரெடியாக வைத்திருக்கிறார் என்பது நாளைக்கான புரமோவிலேயே தெரிந்தது. அதாவது, நீங்கள் எப்படி டுபாக்கூர் ஃபேஷன் ஷோ என்று கூறலாம், அதை பலரும் சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என லெப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமை முதல் ப்ரோமோ வெளியானது. அதில் வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் வரும் வசனம் போல் வாட் இஸ் தி ப்ரோசீஜர் டு சேஞ்ச் தி ரூம் என்று கமலிடம் ரியோ கேள்வியை முன் வைக்கிறார். மேலும் ஷிவானி, ஆஜீத், ரேகா ஆகியோருக்கு முத்திரையை பதிக்கிறார். இன்று பிக்பாஸ் வீட்டில் எந்த மாதிரி பஞ்சாயத்து வெடிக்கப்போகிறது. உலகநாயகன் ஏதாவது குறும்படம் காண்பிப்பாரா என்ற ஆவலில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.