கடந்த 2015-ம் ஆண்டு இயக்குனர் எஸ் எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்தியராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் மிக பிரமாண்டமாய் உருவான படம் பாகுபலி. இதன் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியானது. வசூலையும் அள்ளிக்குவித்து சாதனை படைத்தது. 

இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான் உட்பட வெளிநாடுகளிலும் சாதனை படைத்தது இப்படம். இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவர் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆவார்.
தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். 

தற்போது கங்கனா ரனாவத் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ள தலைவி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா, மகதீரா, சத்ரபதி, எமதுங்கா, உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.

இந்நிலையில் விஜயேந்தி பிரசாத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள விஜயேந்திர பிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில் குணடமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்படும் செய்தியை அதிகமாக பார்க்க முடிகிறது.