விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ரிலீஸ் ஆனது முதலே பெரிய வரவேற்பை பெற்று வந்தது.வீடியோ வருவதற்கு முன்பே ஆடியோ லான்ச்சில் விஜய் ஆடிய ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.பாடல் வரிகள் இல்லாமல் மியூசிக் மட்டும் வருவதால் இந்த பாடல் இன்டர்நேஷனல் லெவல் வரை ரீச் ஆனது.

சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விஜய் போட்ட ஸ்டெப்பை மைதானத்தில் ஆடி அசத்தியிருந்தார்,மேலும் தான் தினமும் அந்த பாடலை கேட்டுத்தான் நாளையே தொண்டங்குவேன் என்றும் தனது லைவ்வில் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி அஹமதாபாத் சென்றுள்ளனர்.அங்கு அஸ்வின்,ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் மூவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடீயோவை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Ashwin (@rashwin99)