மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, சொந்த மகனே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான பவான் என்பவர், தனது மனைவி உடன் வசித்து வந்தார். இவருக்கு கல்யாண வயதில் அமித்தான் என்ற ஒரு மகன் உள்ளார்.

இதனிடையே, கடந்த வருடம் தனது மகன் அமித்தானுக்கு, அவரது பெற்றோர் முறைப்படி பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அமித்தானின் திருமண வாழ்க்கை நல்ல முறையில் சென்றுகொண்டு இருந்து உள்ளது.

இப்படியான சூழ்நிலையில், அமித்தானின் மனைவியை அவரது தந்தையான 45 வயதான மாமனார் பவான், வீட்டில் தனியாக இருக்கும் போது. தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாகத் தெரிகிறது.

மேலும், வீட்டில் மகன் மற்றும் மனைவி இல்லாத நேரங்களில் மருகளிடம் அத்துமீறி நடந்துகொண்டு, அவரை பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தித் தொடர்ந்து அழைத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனை ஒரு கட்டம் வரை பொறுத்துப் பொறுத்து பார்த்த மருமகள், ஒரு கட்டத்தில் பாலியல் தொல்லை எல்லை மீறிப் போகவே, தனது கணவன் அமித்தானிடம் கூறி, அழுது உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த கணவன் அமித்தான், தனது தந்தையை ரகசியமாகக் கண்காணித்து உள்ளார். அப்போது, தனது தந்தை, தனது மனைவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் உறுதிப்படுத்திக்கொண்டார்.

இதனையடுத்து, இந்த விசயத்தைத் தனது தந்தையிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் மனசுக்குள்ளேயே வெதும்பித் தவித்த மகன், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

மேலும், இது தொடர்பாகத் தனது தந்தையிடம் சில முறை சாடைமாடையாக சொல்லிப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் காம மயக்கத்தில் இருந்ததால், மகன் சொல்வது எதுவும் அவர் காதில் விழ என்ற நிலையில், தந்தையை பெற்ற மகனே கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன் படி, அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடம் மகன் அமித்தான், தன் தந்தையை கொலை செய்ய விலை பேசி உள்ளார். அதன் படி, அந்த பகுதியைச் சேர்ந்த 2 பேரிடம் பேசி, 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, தனது தந்தையை கொலை செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.

அதன்படியே, அவரின் தந்தை பவான், அங்குள்ள மண்டேத் காலன் கிராமத்தில் தனக்குச் சொந்தமான வயலுக்கு இரவு 10 மணி அளவில் சென்று உள்ளார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், அவரை அங்கேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உள்ளனர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக காலையில் தகவல் பரவிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பவானின் மகன் அமித்தான் ஆள் வைத்து தந்தையை கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, தந்தையை கொலை செய்த மகன் அமித்தை போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, பணத்தைப் பெற்றுக்கொண்டு கொலை செய்த மற்ற இருவரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.