முட்டை உடல் எடையை குறைக்கும் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். முட்டை வெறும்  ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு முட்டையில் புரதம், இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை உள்ளன. ஒரு நாளில் குறைந்தது ஒரு வேளையாவது முட்டையை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக்கொள்வதால், எவ்வாறு உடல் எடை குறையும் என்று பார்க்கலாம்.


உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் தங்களுக்கான டயட்டில், தினமும் முட்டையை எடுத்துக்கொள்ளவதால், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க வழி செய்யும். டயட்டில் இருப்பவர்கள் குறைவான அளவில் உணவை எடுத்துக்கொள்வார்கள், அவ்வாறு இருக்கையில் சில நேரங்களில் சத்து இழப்பு ஏற்படக்கூடும்.

இதனை சரிசெய்ய டயட்டில், முட்டை எடுத்துக்கொண்டால் தசையின் வலிமையை இழக்கவிடாமல் பார்த்துக்கொள்ளும். காலை உணவு முட்டை நிறைந்த உணவை மட்டுமே சாப்பிட்டு வருவதால் உடலின் கொழுப்பு கரைவதில் நல்ல மாற்றம் இருக்கும். இன்ச் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கிறது. 


ஒரு முட்டையில் 74 கலோரிகள், ஆறு கிராம் புரதம் உள்ளது. தினமும் காலை உணவாக முட்டை எடுத்துக்கொள்ளும் போது குறைவான கலோரியில், பசி தூண்டலை குறைக்கும் உணவாக அமைகிறது. மூளை வளர்ச்சியிலும் முட்டையின் பங்கு அதிகம் இருக்கிறது என்கிறாரகள் மருத்துவர்கள். 


முட்டையில் புரத சத்து, அமினோ அமிலங்கள் , ஒமேகா -3 நிறைந்துள்ளது. இதனால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள், உடல் வலிமையை கொடுக்கிறது. பசி தூண்டலை கட்டுப்பட்டுத்துகிறது. உடல் எடை குறைவதற்கு இது ஒரு முக்கிய காரணம். மேலும் முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவில் வைட்டமின் டி  நிறைந்துள்ளது. வைட்டமின் டி கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது. என்ன.. அப்போ இனி தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம் தானே.. ?