மகாராஷ்டிர மாநிலம் ரைகாட் மாவட்டம் முருத் என்ற பகுதியில், தஃபிக் பஷீர் முஜாவர் என்பவர் வண்டியில்  பழங்களை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அப்போது பசு மாடு ஒன்று வண்டியிலிருந்து பப்பாளி பழத்தை எடுத்து சாப்பிட்டு உள்ளது.  இதனால் தஃபீக் பஷீர் முஜாவர்  பசுவை விரட்டி  அடித்துள்ளார். 


இவ்வாறு தாக்கும் போது, பழம் நறுக்கும் கத்தியால் பசுவின் வயிற்றில் குத்தியுள்ளார். அப்போது பசு தப்பிக்க முயன்றபோது, அதன் கை, கால்களிலும் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. 


இந்த சம்பவதை பார்த்த சாலைவாசி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பசுவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அத்துடன் தஃபீக் பஷீர் முஜாவர் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். 


இந்தியாவில் விலங்குகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது என்கிறது விலங்குகள் உரிமை நல அமைப்பு. கடந்த பத்தாண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான விலங்குகள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.